மதுரை
சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
|சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
வாடிப்பட்டி,
சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கல்லூரி மாணவர் சாவு
மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை நகரை சேர்ந்தவர் முருகன். இவர் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வருகிறார். இவரது மகன் இளஞ்செழியன் (வயது 21). இவர் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் சமயநல்லூர் அருகே சுடுகாடு பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளிப்பதற்காக சென்றார்.
அங்கு அவர் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இளஞ்செழியன் ஆழமான பகுதிக்கு சென்று அங்கிருந்த பள்ளத்தில் மாட்டிக்கொண்டார். பின்னர் சிறிது நேரத்தில் இளஞ்செழியன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி பழனிமுத்து தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று இளஞ்செழியனை உடலை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.