< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மறைமலைநகர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|27 April 2023 2:51 PM IST
மறைமலைநகர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 19), இவர் மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கல்லூரி மாணவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.