< Back
மாநில செய்திகள்
திருத்தணி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
27 Jan 2023 5:27 PM IST

திருத்தணி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

கல்லூரி மாணவி

திருத்தணி அடுத்த தும்பிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிநாதன் (வயது 62) விவசாயி. இவருடைய மகள் விநாயகி (19). இவர் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி விநாயகிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்து வீட்டுக்கு விரைந்து வந்த முனிநாதன் மகள் விநாயகியை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த விநாயகி சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். மாணவி விநாயகி இறந்தது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்