< Back
மாநில செய்திகள்
திருவல்லிக்கேணி அரசு விடுதியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மாநில செய்திகள்

திருவல்லிக்கேணி அரசு விடுதியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
21 Dec 2022 10:06 AM IST

திருவல்லிக்கேணி அரசு விடுதியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சித்தாலப்பாக்கம் அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் சதீஷ் (வயது 19). இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகே உள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்த சதீஷ், பகுதி நேரமாக கல்லூரி அருகே உள்ள பீட்சா கடையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து அறைக்கு சென்ற சதீஷ், காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் பக்கத்து அறையில் இருந்த மாணவர்கள், அறை கதவை தட்டி பார்த்தனர். ஆனால் சதீஷின் அறை கதவு திறக்கப்படவே இல்லை. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு அறையில் இருந்த மின்விசிறியில் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சதீஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? அவர் கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா?, என்பது குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்