< Back
தமிழக செய்திகள்
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருவண்ணாமலை
தமிழக செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
26 Jan 2023 10:45 PM IST

செய்யாறு அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செய்யாறு

செய்யாறு தாலுகா புரிசை கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் கீதா (வயது 21), தனியார் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தின் தூக்குப்போட்டு கொள்ள முயன்றார். அங்கிருந்தவர்கள் உடனடியாக கீதாவை மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிவலிங்கம் தனது மகள் செல்போனை பார்த்த போது அதில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதில் செய்யாறு தாலுகா சடத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் பிரவீன் (22) என்பவர் காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதாகவும், பிறகு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்ததாகவும் அதனால் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்