< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
19 Dec 2022 12:15 AM IST

புதுக்கடை அருகே மருத்துவம் படிக்கும் ஆசை நிறைவேறாததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கடை:

புதுக்கடை அருகே மருத்துவம் படிக்கும் ஆசை நிறைவேறாததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள அம்சி வலியவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகள் ஷெர்லின் (வயது 17). இவர் மங்கலகுன்று பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

ஷெர்லின் 12-ம் வகுப்பு படிக்கும் போதே மருத்துவம் படிக்க ஆசைப்பட்டார். ஆனால் குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாகவும், சுமாராக படித்ததாலும் அவருடைய மருத்துவ கனவு நிறைவேறவில்லை. இதனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஷெர்லின் வீட்டில் இருந்தார். இரவு படுக்கை அறைக்கு சென்றவர் திடீரென தூக்கில் தொங்கினார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஷெர்லின் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

பின்னர் இதுபற்றி புதுக்கடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவம் படிக்கும் ஆசை நிறைவேறாததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்