< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
27 Sept 2022 12:15 AM IST

கோவையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை

கோவையில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஜெய் நகரை சேர்ந்தவர் பரமதயாளன். இவருடைய மனைவி துளசி ராணி. இவர்களது மகன் ஆகாஷ் (வயது 20). கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள இந்திரா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆகாஷை அவரது தாயார் துளசி ராணி செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளருக்கு, துளசி ராணி தகவல் கொடுத்தார்.

தற்கொலை

இதையடுத்து ஆகாஷ் தங்கி இருந்த அறைக்கு வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்தார். அங்கு கதவை திறந்து பார்த்தபோது, அவர் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் சம்பவ இடத்துக்கு சென்று ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஆகாஷ் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்