< Back
மாநில செய்திகள்
அஞ்சுகிராமம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
31 July 2022 12:39 AM IST

அஞ்சுகிராமம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கல்லூரி மாணவர் தற்கொலை

அஞ்சுகிராமம் அருகே பால் குளத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருடைய மகன் ரோஷன் (வயது 18). இவர் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-வது ஆண்டு படித்து வந்தார். கடந்த 3 மாதமாக கல்லூரிக்கு சரி வர செல்லாமல் இருந்து வந்ததாகவும், அதை தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் ரோஷன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து கலைச்செல்வன் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கு காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்