< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
15 Oct 2023 11:34 PM IST

பொய் சொல்லியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வந்தவாசி

பொய் சொல்லியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் குமரேசன் (வயது 17). திருப்புவனம் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிதவியல் படித்து வந்தார். குமரேசன் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாததால் அவருடைய தந்தை சங்கர், குமரேசனை கண்டித்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று குமரேசன் அவருடைய மகன் சங்கரை கீழ்க்கொடுங்காலில் உள்ள வங்கியில் குமரேசனின் கணக்கை சரிபார்த்து வருமாறு கூறியுள்ளார். குமரேசன் வங்கி விடுமுறை என்று பொய் சொல்லியதால் சங்கர் குமரேசனை மீண்டும் கண்டித்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த குமரேசன் அவருடைய விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் அவருடைய தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவருடைய தந்தை தூக்கில் தொங்கி கொண்டிருந்த குமரேசனை மீட்டு அவருடைய பைக்கில் உத்திரமேரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது குமரேசன் இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து அவருடைய தந்தை சங்கர் கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்