< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
1 Oct 2023 2:54 AM IST

ஒரத்தநாடு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஒரத்தநாடு:

தூக்குப்போட்டு தற்கொலை

ஒரத்தநாட்டை அடுத்துள்ள 34,கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் விதர்கன் (வயது19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மதியம் ரவிச்சந்திரன் கூலி வேலைக்கு சென்று விட்டார். அவரது தாயார் தேவி புல் அறுக்க வெளியே சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத இந்த நேரத்தில் விதர்கன் சேலையில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் மாணவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சகொண்டு சென்றனர். அங்கு விதர்கனை பரிசோதித்த டாக்டர், மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விதர்கன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்