< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
30 Sept 2023 3:00 AM IST

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் அருகே உள்ள ஆர்.எம்.டி.சி. காலனி ராதாராஜ் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மகாதேவி (வயது 18). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. (சைக்காலஜி) முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் சோகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறையில் மகாதேவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மகாதேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்