< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
25 Aug 2023 12:15 AM IST

தக்கலை அருகே கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை:

தக்கலை அருகே கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவன்

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 50). முன்னாள் கவுன்சிலரான இவருடைய மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களுடைய ஒரே மகன் குருநாத் (21).

நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் குருநாத் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு தினமும் அரசு பஸ்சில் சென்று வந்த அவர் கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் அதிகமாக பேசாமல் ஏதோ சோகத்தில் இருந்துள்ளார்.

இதனை பார்த்த அவரது தாயார், ஏன் இப்படி சோகத்துடன் இருக்கிறாய் என கேட்டுள்ளார். ஆனால் அவர் பதில் ஏதும் கூறவில்லை.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று காலையில் குருநாத் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் வெளியே சென்ற ஸ்ரீதரன் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு மகனை காணவில்லை. இதனால் அவர் மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.

அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் பயந்து போன அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். குருநாத் தூக்கில் தொங்கிய நிலையில் அசைவற்று கிடந்தார்.

உடனே பதற்றத்துடன் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்