< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை... ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்
மாநில செய்திகள்

விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை... ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்

தினத்தந்தி
|
16 July 2024 2:45 AM IST

விவசாய நிலங்களுக்கு அடிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தை கல்லூரி மாணவர் குடித்துள்ளார்.

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் ஊராட்சி முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அக்மல் (வயது 20). இவர் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக அக்மல் கல்லூரிக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அக்மலை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அக்மல் தாழவேடு பகுதியில் உள்ள மாந்தோப்பில் விவசாய நிலங்களுக்கு அடிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தினை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்து உள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அக்மலை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரிக்கு செல்லாமல் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்