< Back
மாநில செய்திகள்
காதலனுடன் நண்பர் வீட்டுக்குச் சென்ற கல்லூரி மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை
மாநில செய்திகள்

காதலனுடன் நண்பர் வீட்டுக்குச் சென்ற கல்லூரி மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
21 April 2024 12:06 AM IST

மாணவியின் காதலன் உட்பட அவரின் நண்பர்கள் ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி ஶ்ரீரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டுக்குச் சென்ற கல்லூரி மாணவி அந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் ராஜகோபால நகரை சேர்ந்தவர் ஜெய் ஸ்ரீ. கல்லூரி மாணவியான இவர், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிஷோர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஸ்ரீரங்கம் வடக்கு சித்தர வீதியில் உள்ள கிஷோரின் நண்பர் வீட்டிற்கு சென்ற ஜெய் ஸ்ரீ, திடீரென அந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை அவரின் காதலன் மற்றும் நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், மாணவியின் காதலன் கிஷோர் உட்பட அவரின் நண்பர்கள் ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐந்து பேரில் இருவர் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான நிலையில், மாணவி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்