< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர் தற்கொலை
தேனி
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
29 Jun 2022 10:45 PM IST

பெரியகுளத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் அதிர்ஷ்டம். இவரது மகன் சஞ்சய் குமார் (வயது 18). இவர் தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு வயிற்று வலி அதிகமாக இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுமாறு அவரது தந்தை கூறிவிட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அவருடைய தந்தை வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு ஒரு அறையில் சஞ்சய்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அவருடைய தந்தை அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்று வலி வேதனை தாங்க முடியாமல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்