< Back
மாநில செய்திகள்
தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு பள்ளி மாணவியை கடத்தி வந்த கல்லூரி மாணவர் கைது
சென்னை
மாநில செய்திகள்

தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு பள்ளி மாணவியை கடத்தி வந்த கல்லூரி மாணவர் கைது

தினத்தந்தி
|
24 July 2023 3:52 PM IST

தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு பள்ளி மாணவியை கடத்தி வந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த மாதவரம் பஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இளம்பெண்ணுடன், வாலிபர் சுற்றி திரிவதை கண்டு அவர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் என்பதும், அவர், பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியை காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து சிறுமியை கடத்தியதாக கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார், இதுபற்றி தெலுங்கானா மாநில போலீசார் உதவியுடன் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து மாதவரம் வரவழைத்து அவர்களிடம் சிறுமியை பத்திரமாக ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்