< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர் கைதுவீடியோ பரவியதால் பரபரப்பு
|20 March 2023 2:32 AM IST
நெல்லையில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் அஜய் கோபி (வயது 22). இவர் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய உறவினர் வெள்ளை சுந்தர்.
இந்த நிலையில் வெள்ளை சுந்தர், அஜய் கோபிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த வீடியோ காட்சியானது சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இந்த சம்பவம் முன்பே நடந்துள்ளது என்றும், தற்போது அது சமூக வலைத்தளத்தில் பரவ விடப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அஜய் கோபியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான வெள்ளை சுந்தரையும் தேடி வருகின்றனர். துப்பாக்கி சுடும் பயிற்சியின் பின்னணி தொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.