< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது
|9 Feb 2023 12:15 AM IST
மாணவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்:
தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த சுடலை மகன் மதன்குமார் (வயது 20). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
மதன்குமார் ஆலங்குளம் மகளிர் போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட ஒரு பகுதியை சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவியை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் மதன்குமாரின் நடவடிக்கை பிடிக்காமல் அந்த மாணவி விலகியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மதன்குமார், அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மதன்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.