< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர் கைது
|22 Aug 2022 10:21 PM IST
புளியங்குடியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கைது
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி வடக்கு ரத வீதியை சேர்ந்த முருகன் மகன் தனுஷ்குமார் (வயது 22). இவர் சட்டப்படிப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.
புளியங்குடி பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சிந்தாமணியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் தனுஷ் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.