< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர் கைது
|6 Sept 2023 3:15 AM IST
வத்தலக்குண்டு அருகே 17 வயது சிறுமி பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
வத்தலக்குண்டு அருகே உள்ள மல்லணம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (வயது 19). என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். இவர், 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தரப்பில், வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பக்டர் முருகன், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் குமாரை கைது செய்தார்.