< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியை ஓட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியை ஓட்டம்

தினத்தந்தி
|
10 Feb 2023 1:23 AM IST

என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியை ஓட்டம் பிடித்தார்.

மலைக்கோட்டை:

பேராசிரியை

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அக்ரகாரம் விஷ்ணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60). இவரது மகள் வைஷ்ணவி (26). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர். அவருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

மாயம்

இதற்கிடையே நேற்று முன்தினம் ஜவுளி எடுப்பதற்காக கார்த்திகேயன் மற்றும் குடும்பத்தினர் வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு திருச்சியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு வந்தனர். அப்போது வைஷ்ணவி கழிவறைக்கு சென்று வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் மற்றும் உறவினர்கள் வைஷ்ணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை. ேமலும் ஜவுளிக்கடையில் இருந்து மணப்பெண் மாயமான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இதுதொடர்பாக கார்த்திகேயன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணப்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்