சென்னை
இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு மனித சங்கிலி
|இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
சென்னை,
உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 28-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி, இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் மாணவிகளுடன் பேராசிரியர்கள், பணியாளர்களும் பங்கேற்றனர்.
உலக வெப்பமயமாதலால் ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இயற்கையை தனிநபராக இல்லாமல் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வில் வலியுறுத்தினார்கள். மேலும், அந்த வழியாக சென்ற மக்களுக்கு இயற்கை பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கும் வகையில் வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் வைத்திருந்ததோடு, பயன்தரக்கூடிய 10 மரங்களின் விதைகளையும் மக்களுக்கு கொடுத்து, அதை வீட்டில் நட அறிவுறுத்தினார்கள்.