< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
|8 Nov 2022 12:15 AM IST
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
தொடர் மழையினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாரதி தலைமை தாங்கி நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
எர்ணாபுரம் ஆயுஷ் மருத்துவ அலுவலர் பூபதி ராஜா, மாணவிகள் முதன்மை விடுதி துணை கண்காணிப்பாளர் ஷர்மிளா பானு, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுகந்தி, கோமதி, இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி ஆகியோர் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.