< Back
மாநில செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறைகளை கலெக்டர்கள் ஆய்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறைகளை கலெக்டர்கள் ஆய்வு

தினத்தந்தி
|
30 March 2023 12:02 AM IST

மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறைகளை கலெக்டர்கள் ஆய்வு செய்தனர்.


அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் முறையே, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரியலூரில் உள்ள அறையில் 940 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 779 கட்டுப்பாட்டு கருவிகளும், 386 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் என மொத்தம் 2,105 மின்னணு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூரில் உள்ள அறையில் 1,501 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 821 கட்டுப்பாட்டு கருவிகளும், 824 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் என மொத்தம் 3,146 மின்னணு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ரமணசரஸ்வதி (அரியலூர்), கற்பகம் (பெரம்பலூர்) நேரில் பார்வையிட்டு காலாண்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறையில் கேமரா பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதையும் கலெக்டர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்