< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

தனியார் பள்ளி பேருந்துகளை ஓட்டிப் பார்த்து ஆட்சியர்கள் ஆய்வு..!

தினத்தந்தி
|
9 July 2022 11:46 PM IST

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஓட்டிப்பார்த்து மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஓட்டிப்பார்த்து மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு பள்ளிகளின் வாகனங்களை ஒருங்கிணைத்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஆவணங்கள் சரியாக உள்ளதா என்றும் வாகனங்களின் நிலைமை குறித்தும் அறிய ஆட்சியர் வாகனங்கை ஓட்டிப் பார்த்தார். இதேபோல 16 வகையான சோதனைகளை மேற்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஶ்ரீதர் பேருந்துகள் ஆய்வின் போது பேருந்து ஒன்றை இயக்கி சோதித்தார்.

மேலும் செய்திகள்