தேனி
போடியில் ரத்த தானம் செய்த கலெக்டர்
|போடியில் நடந்த ரத்ததான முகாமில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ரத்த தானம் செய்தார்.
உலக ரத்ததான தினத்தையொட்டி போடி அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கலந்துகொண்டு, ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் தானும் ரத்த தானம் செய்தார். அதன்பிறகு நடந்த நிகழ்ச்சியில் ரத்ததான தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம், ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து கலெக்டர் பேசினார். ரத்த தானம் வழங்கிய கலெக்டருக்கு சுகாதாரத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, குடும்ப நலப்பணிகள் துணை இயக்குனர் அன்புச்செழியன், போடி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் ரத்த வங்கி டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.