< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ஊராளிபட்டி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
|19 Aug 2023 1:00 AM IST
நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
நத்தம் அருகே ஊராளிபட்டியில் புதிதாக பள்ளி வகுப்பறை கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அந்த பகுதியில் நடைபெறும் காலை சிற்றுண்டி உணவு திட்ட பணிகளையும், மகளிர் உரிமை தொகை பதிவதற்கான முகாமையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஊராட்சி தலைவர் தேனம்மாள்தேன் சேகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.