< Back
மாநில செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
8 July 2022 1:22 PM IST

திருத்தணி அருகே ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருத்தணி அடுத்த பூனிமாங்காடு, தும்பிக்குளம், கேஜி கண்டிகை, பீரகுப்பம், திருத்தணி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதார நிலையத்தில், நோயாளிகளின் வருகை பதிவேடு, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேவை பதிவேடு, மக்களை தேடி மருத்துவம், மற்றும் வாரந்தோறும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து, புற நோயாளிகள் கிசிச்சை பிரிவு, அறுவை கிகிச்சை பிரிவு, மருந்து பொருட்கள் இருப்பு, குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட இணை இயக்குனர் ஜவஹர், மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் தேவி, மாவட்ட தொற்றுநோய் அலுவலர் கார்த்திகேயன், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன், திருவாலங்காடு வட்டார மருத்துவ அலுவலர் பிரகலாதன், மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்