< Back
மாநில செய்திகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
10 July 2022 12:12 AM IST

ராமநாயக்கன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.5¼ லட்சம் மதிப்பில் நடைபெறும் சமுதாய பொது கழிவறை கட்டுமான பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டார்.

இதேபோல், ராமநாயக்கன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர் அறை, பிரசவ அறை, பிரசவத்திற்கு பின் கவனிப்பு அறை, காத்திருப்பு அறை உள்ளிட்ட அறைகளை பார்வையிட்டார்.

மல்லங்குப்பம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் நூலக கட்டிட புனரமைப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரகலா, ரகுகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்