கள்ளக்குறிச்சி
அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
|கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டாா்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாியில் உள்ள அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதியதாக ஏற்படுத்தப்பட்ட தனிப்பிரிவு மையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவா் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் தஞ்சம் அடைபவர்கள் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி சிகிச்சை பிரிவில் உாிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நோயில் இருந்து மீண்டு குணமானவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறு,சிறு வேலைகளில் ஈடுபடுத்தியும், தோட்டக்கலை பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தகவல்கள் தெரிவிக்கலாம்
மனநலம் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களை அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் விவரங்களை கேட்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் உள்ளவர்கள் குறித்த தகவல்களை 102 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம்.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காவல்துறை உதவியுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாியில் செயல்பட்டு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிப்பிரிவில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி அரசு பொது ஆஸ்பத்திாி நிலை மருத்துவர் அனுபாமா, கண்காணிப்பாளர் நேரு, கூடுதல் நிலை மருத்துவர்கள் பழமலை, பொற்செல்வி, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் இன்னுயிர் காப்போம், நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் பொறுப்பு மருத்துவர் கணேஷ்ராஜா மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் உள்ளனர்.