< Back
மாநில செய்திகள்
வாரிசு, துணிவு படங்களை வெளியிட்ட திரையரங்குகளை மூட கலெக்டர்  உத்தரவு
மாநில செய்திகள்

'வாரிசு', 'துணிவு' படங்களை வெளியிட்ட திரையரங்குகளை மூட கலெக்டர் உத்தரவு

தினத்தந்தி
|
2 May 2023 5:10 PM IST

5 திரையரங்குகள் தடையை மீறி, 'வாரிசு', 'துணிவு' ஆகிய படங்களின் சிறப்பு காட்சியை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகை தினங்களில் திரையரங்குகளில் அதிகாலை சிறப்பு காட்சிகளை வெளியிட தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 திரையரங்குகள் தடையை மீறி, 'வாரிசு', 'துணிவு' ஆகிய படங்களின் சிறப்பு காட்சியை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் அளிக்காத நிலையில், சம்பந்தப்பட்ட திரையரங்குகளை 3 நாட்கள் மூட கலெக்டர்உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு சென்ற தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை வெளியேற்றி திரையரங்குகளை மூடினர். இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்