< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாளைமறுநாள் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
|13 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே நாளை மறுநாள் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடி வைக்க வேண்டும். இதைமீறி மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.