< Back
மாநில செய்திகள்
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில்தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில்தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

தினத்தந்தி
|
23 May 2023 12:30 AM IST

நாமக்கல் கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த இவர் திடீரென மறைத்து வைத்து இருந்த பாட்டிலை எடுத்து மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீட்டு, தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நிலப்பிரச்சினை தொடர்பாக தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சிறிது நேரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்