< Back
மாநில செய்திகள்
பட்டாசு தொழிற்சாலைகள், விற்பனை கடைகளில் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பட்டாசு தொழிற்சாலைகள், விற்பனை கடைகளில் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

பட்டாசு தொழிற்சாலைகள், விற்பனை கடைகளில் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

பட்டாசு தொழிற்சாலைகள், விற்பனை கடைகளில் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

பயிற்சி கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு சில்லறை விற்பனை நிலையங்களில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கோட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கூட்டம் கலெக்டர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசும்போது, மாவட்டத்தில் 17 உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அதில் 15 கிலோவுக்கு கீழே உள்ள வெடி மருந்துகளை கையாளும் 9 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், 15 கிலோவில் இருந்து 500 கிலோ வரை வெடிமருந்துகளை கையாளும் 8 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்னையில் இருக்கின்ற பெசோ என்று சொல்லக்கூடிய அமைப்பின் மண்டல அலுவலகம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த பட்டாசு தொழிற்சாலைகளிலும் 165 தீப்பெட்டி தொழிற்சாலைகள், 184 பட்டாசு விற்பனை கடைகளிலும் அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, போலீஸ் துறை, தீ தடுப்பு மற்றும் மீட்பு துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையை சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய கோட்ட அளவிலான 3 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மேற்கண்ட நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறதா? என்ற அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்க அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மூலப்பொருள் தொழிற்சாலைக்குள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகள் அனைத்தும் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களில் முறையாக பின்பற்றப்படுவதை கோட்ட அளவிலான குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில், உதவி கலெக்டர்கள் கவுரவ்குமார், குருசந்திரன், ஜேன் கிறிஸ்டி பாய், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குனர் சித்ரா, தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ் அனந்த் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்