நாகப்பட்டினம்
கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் எச்சரிக்கை
|லியோ படத்துக்கு கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி நடத்தப்பட உள்ளது. எனவே விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லியோ படத்துக்கு கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி நடத்தப்பட உள்ளது. எனவே விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லியோ திரைப்படம்
தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் லியோ திரைப்படத்துக்கு கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் லியோ திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் 19- ந் தேதி முதல் 24- ந்தேதிவரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் அனுமதிக்கப்படுகிறது.
காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்குள் முடிவடையும் வகையில் லியோ திரைப்படம் திரையிடப்பட வேண்டும். மேலும் அதிகாலை 1.30 மணி முதல் காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையிடக்கூடாது.
சிறப்பு குழு அமைப்பு
நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதி மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க நாகை உதவி கலெக்டர் 9445000461, வேதாரண்யம் வருவாய் உதவி கலெக்டர் 9445000303, நாகை தாசில்தார் 9445000616, வேதாரண்யம் தாசில்தார் 9445000617 என்ற செல்போன்களில் புகார் தெரிவிக்கலாம்.
கடும் நடவடிக்கை
தியேட்டர்களில் சுகாதாரம், பாதுகாப்பு, பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து அமர சரியான இருக்கை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். வாகன நிறுத்தத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படக்கூடாது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.