< Back
மாநில செய்திகள்
திருச்சி வேளாண் சங்கமம் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள கலெக்டர் அழைப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

திருச்சி வேளாண் சங்கமம் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள கலெக்டர் அழைப்பு

தினத்தந்தி
|
27 July 2023 12:49 AM IST

திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் கண்காட்சியில் அரியலூர் விவசாயிகள் கலந்து கொள்ள கலெக்டர் அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு அரசின் வேளாண்-உழவர்நலத்துறையின் சார்பில் மாநில அளவிலான வேளாண்மை கண்காட்சியை (வேளாண் சங்கமம்) திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சி 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதுடன், அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வேளாண் எந்திரங்களையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான அரசின் அனைத்து திட்டங்களை பற்றியும் தெரிந்துகொள்ளும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்திடவும், விவசாயிகளுக்கான புதிய தொழில்நுட்பங்கள், மின்னணு விற்பனை, வேளாண் காடுகள், தோட்டக்கலை தொழில்நுட்பம், நவீன வேளாண் எந்திரங்கள், வேளாண் ஏற்றுமதி போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன. எனவே, இந்த நிகழ்ச்சியில், அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டா் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்