கடலூர்
மேம்பாலம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
|புவனகிரி அருகே மேம்பாலம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
புவனகிரி,
புவனகிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் புவனகிரி-குறிஞ்சிப்பாடியை இணைக்கும் வகையில் அங்குள்ள ஏரியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பணியை தரமாக செய்ய வேண்டும். மேலும் வருகிற பருவமழைக்கு முன்பு பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தவறு ஏதும் நடைபெறக்கூடாது என்றார். தொடர்ந்து பரங்கிப்பேட்டை ஒன்றியம் புதுக்குப்பம் கிராமத்தில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியையும் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.