< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மின்னணு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவை கலெக்டர் ஆய்வு
|30 July 2023 12:16 AM IST
மின்னணு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவை கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான முதல் நிலை சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் பழுது நீங்கலாக 3,277 வாக்குப்பதிவு எந்திரங்கள், 2,106 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2,390 வி.வி.பேட் உள்ளிட்டவைகள் ஏற்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுவதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தநிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.