< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
6 Jun 2023 11:31 PM IST

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை திருக்கட்டளை சாலையில் நகராட்சி குப்பை கிடங்கில், பயோ மைனிங் முறையில் தரம் பிரித்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் புதுக்கோட்டை ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பெரம்பலூர் - மானாமதுரை சாலை முதல் புதுராசாப்பட்டி சாலை வரை ரூ.25.65 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணியினையும் மற்றும் புதுக்கோட்டை வட்டம், ெசம்பட்டி விடுதி கிராமம், கம்மங்காடு அணைக்கட்டிலிருந்து பூண்டிக்குளம் கண்மாயிக்கு செல்லும் வலதுபுற வழங்கு வாய்க்கால் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினையும் அவர் பார்வையிட்டார். இதேபோல கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பதிவேடுகள், அலுவலக செயல்பாடுகள் குறித்தும் அவர் பார்வையிட்டார். கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல பல்வேறு வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்வுகளில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கந்தர்வகோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் என்கிற ரெத்தினவேல் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்