< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
|6 May 2023 6:41 PM IST
வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
லால்குடிக்கு கலெக்டர் பிரதீப்குமார் வருகை தந்தார். அவர் தாளக்குடி, புதுக்குடி, பெரியவர்சீலி, சிறுமருதூர், சாத்தமங்கலம், கொப்பாவளி, காட்டூர் ரோடு மேற்கு வாய்க்கால், கொன்னைக்குடி சிறுமயங்குடி ஊராட்சி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மேலும் மாங்குடி, ஆர்.வளவனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, அவர் வீட்டின் கட்டுமானப் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது, அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் சென்றனர்.