< Back
மாநில செய்திகள்
முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம்
மாநில செய்திகள்

முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில்வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
7 Oct 2023 12:15 AM IST

முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.


முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அருணாபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் ஏரி மதகு மேம்பாட்டு பணி மற்றும் புதிய மதகு அமைத்தல் பணியையும், அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து வீரங்கிபுரம் கிராமத்தில் ரூ.28 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிடம் கட்டும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பணியாளர்களிடம் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், நாராயணன், ஒன்றிய பொறியாளர் குணசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்