ராமநாதபுரம்
மனநல காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு
|ஏர்வாடியில் உள்ள மனநல காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கீழக்கரை,
ஏர்வாடி தர்கா மனநல காப்பகத்தில் 28 ஆண்களும் 22 பெண்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு மனநோயாளிகளுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படுகிறதா? மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது காப்பகத்தில் உள்ள பதிவேடுகள், மனநோயாளிகள் செய்த கைவினை பொருட்களை பார்வையிட்டார்.அதை தொடர்ந்து காட்டுப்பள்ளி தர்கா, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தினமும் ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் காட்டுப்பள்ளி தர்காவிற்கு வந்து செல்வதால் காட்டுப்பள்ளி சாலை மற்றும் சேர்மன் சாலையை சீரமைக்க கோரி உத்தரவிட்டார். அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் குப்பை கொட்டும் இடங்களை தூய்மைபடுத்தி பூங்காவாக மாற்றி அமைத்த ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸை பாராட்டினார். ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல உதவி அலுவலர் ஜெய்சங்கர், கீழக்கரை தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் பழனிக்குமார், ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் சைய்யது அப்பாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.