< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட  பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
1 Jun 2023 2:11 PM IST

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட உப்பேரிகுளம், பல்லவன் நகர், மகாலிங்கம் நகர், விஷ்ணு நகர், திருவீதிபள்ளம் போன்ற பகுதிகளில் தலா ரூ.25 லட்சம் செலவில் 5 இடங்களில் ரூ.1 கோடியே 25 லட்சம் மட்டும் நிதியுதவியில் நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. பல்லவன் நகர், விஷ்ணு நகர், மகாலிங்கம் நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த மையங்களில் மருத்துவ சேவையை விரைவில் தொடங்க மாநகராட்சி அலுவலர் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்