< Back
மாநில செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
18 Oct 2023 12:30 AM IST

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அங்குள்ள குழந்தைகள் வார்டு மற்றும் ரத்த வங்கிக்கு சென்று பார்வையிட்டார். குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டார். வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். வார்டுகளை தூய்மையாக பராமரிக்கவும், மழைக்கால நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தேவையான வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் செய்திகள்