சிவகங்கை
விவசாய நிலங்களில் கலெக்டர் ஆய்வு
|இளையான்குடி வட்டாரத்தில் விவசாய நிலங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இளையான்குடி,
இளையான்குடி வட்டாரத்தில் பருவமழை குறைவாக பெய்ததால் நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு அரசின் சார்பில் நிவாரணங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக இளையான்குடி வட்டாரத்தில் காரைக்குளம் மற்றும் நெஞ்சத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள வயல் பகுதிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி கள ஆய்வு செய்தார்.
மேலும் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. இதற்கான அறிக்கையினை துறை ரீதியாக சமர்ப்பித்து அரசால் வழங்கப்படும் உரிய நிவாரணங்களை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த ஆய்வின் போது வேளாண்மை துறை இணை இயக்குனர் தனபாலன், இளையான்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன், வேளாண்மை அலுவலர் அழகர்ராஜா, தாசில்தார் அசோக்குமார், துணை வேளாண்மை அலுவலர் சப்பானி முத்து, உதவி வேளாண்மை அலுவலர் யுவராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.