திருவாரூர்
தற்காலிக பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு
|திருத்துறைப்பூண்டியில் தற்காலிக பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியில் தற்காலிக பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதிய பஸ் நிலையம்
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி நகராட்சி பஸ் நிலையத்தை "சி" கிரேடில் இருந்து "பி" கிரேடு பஸ் நிலையமாக மேம்பாடு செய்ய தமிழ்நாடு அரசு நிதி ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஒப்பந்தம் கோரி பணி தொடங்க உள்ளது.பணி நடைபெறும் காலத்தில் பஸ்கள் வந்து செல்ல தற்காலிக பஸ் நிலையம் அமைக்க அரசு கால்நடை ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதில் வடபுறம் உள்ள காலியிடத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் மார்க்கமாக வந்து செல்லும் பஸ்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பழைய டெப்போ இயங்கி வந்த இடத்தில் முத்துப்பேட்டை, மன்னார்குடி மார்க்க பஸ்களை நிறுத்த நகராட்சி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரியது.
கலெக்டர் ஆய்வு
இந்த இடத்தை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், தாசில்தார் கார்ல் மார்க்ஸ், ஆணையர் மல்லிகா, நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெய்சங்கர் ஆகியோர்இருந்தனர்.