< Back
மாநில செய்திகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர்  ஆய்வு
கடலூர்
மாநில செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
2 Jun 2022 10:50 PM IST

மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கீழ்கவரப்பட்டு துணை சுகாதார நிலையத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டாா். இதில் கர்ப்பிணிகள் பரிசோதனை பிாிவு, தடுப்பூசி செலுத்தும் பிாிவு, பொது நோயாளிகள் பரிசோதனை பிாிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மாத்திரைகள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தாா். பின்னர் அங்கிருந்த டாக்டா்களிடம், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டக்கூடாது என்று கலெக்டா் அறிவுறுத்தினார். அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில் கவுன்சிலர்கள் கலெக்டா் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை

மேலும் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்குவதன் மூலம் படுக்கை வசதியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தனர். அதற்கு கலெக்டா் பதிலளித்து கூறுகையில், இது சம்பந்தமாக துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத் சிங், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆறுமுகம், மேல்பட்டாம்பாக்கம் செயல் அலுவலர் சண்முகசுந்தரி, வட்டார சுகாதார ஆய்வாளர் சத்திய நாராயணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்