< Back
மாநில செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
21 May 2022 7:05 AM GMT

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு சிகிச்சைகளுக்கென உள் மற்றும் புறநோயாளிகள் பிரிவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று பயனடைகின்றனர். இதில் நூற்றுகணக்கானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு போன்ற பிரிவுகளுக்கு சென்று திடீர் ஆய்வுமேற்கொண்டார்.

டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் வருகையை உறுதிசெய்த அவர், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் டாக்டர்களிடம் சிகிச்சை அளிக்கப்படும் முறைகள், படுக்கைகள், மருத்துவ உபகரண தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் நோயாளிகளை கனிவுடன் கவனிக்கவும், அவர்களுக்கு திருப்திகரமான சிகிச்சைகள் மேற்கொள்ளவும், தனியார் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சையை விட நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேலும் செய்திகள்