< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு
|21 Jan 2023 2:11 AM IST
அகரமாங்குடி ஊராட்சியில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மெலட்டூர்;
அகரமாங்குடி ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி ப்பணிகளை கலெக்்்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அங்கன்வாடி கட்டிடம், மற்றும் அங்கு நடைபெற்று வரும் சாலைப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டா் மெலட்டூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்துக்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அமானுல்லா மற்றும் பலா் இருந்தனர்.