தஞ்சாவூர்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் ஆய்வு
|கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கும்பகோணம்;
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தார்.தஞ்சை மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் செயல்படும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி, தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்கள் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த விற்பனை கூடத்திற்கு 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக புதன்கிழமைகளில் இந்த விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பருத்தியை விற்று வருகின்றனர்.நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு செய்தார். வேளாண்மை விற்பனைக்கூடத்தின் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் விளைபொருட்கள், பொருள் ஈட்டுக்கடன், இ நாம் திட்ட செயல்பாடுகள் போன்ற விவரங்களை ஆய்வு செய்தார். ஆய்வின்போது கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி மற்றும் பலர் இருந்தனர்.